ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் ராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று தாக்குதல் நடத்தி கொன்றதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேலில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்.7 அன்று நடைபெற்ற தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களில் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் முதன்மையானவர் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹதாத் கொல்லப்பட்டதை அவரது குடும்பத்தினர் இன்று (மே 16) உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, ஹமாஸ் தலைவரான முகமது சின்வார் கொல்லப்பட்ட பிறகு அந்தப் பதவிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
The Israel has announced that it has killed the head of the military wing of the Hamas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










