தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக சீன அதிபரை பாகிஸ்தான் பிரதமர் இன்று சந்தித்தார்.

News image

சீன அதிபர் ஷி ஜின்பிங் / பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் - AP

Updated On :25 மே 2026, 6:48 pm IST

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பல நட்பு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-கை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இன்று சந்தித்தார்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் முக்கிய நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தானில் இரு நாட்டு அதிகாரிகளும் நடத்திய நீடித்த பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 4 நாள்கள் பயணமாக சீனா சென்ற பாகிஸ்தான் பிரதமர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். அவருடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிர் உடன் சென்றார்.

அப்போது பேசிய ஷி ஜின்பிங், “மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருகின்றது. இரு நாடுகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு பனிப்போர் மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும்” என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளின் தலைமை அதிகாரிகளுடன் போனில் பேசியும் சந்திப்புகளை நடத்தியும் அமைதியான முறையில் சீனா மத்தியஸ்தம் செய்து வந்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேசுகையில், “உலகம் நெருக்கடியான தருணத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது நிலைமை சரியாகி வருகின்றது. அமைதியை நிலைநிறுத்த சீனாவின் ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த தொடர்ந்து பல நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்கா நிலைப்பாடுகளை மாற்றுவதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

Summary

Iran Ceasefire Talks: Pakistan Prime Minister Meets with Chinese President

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.