இஸ்ரேல், அமெரிக்கா உடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஈரானிலிருந்து 10 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை வந்தடையும் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய தாக்குல்கள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்த நிலையில், ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.
இந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தத்துக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக பங்காற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி பாகிஸ்தான் வருமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார்.
இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே, இந்த முக்கிய பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (ஏப்.10) பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு ஈரான் ஒப்புதல் அளித்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவும் பேச்சுவார்த்தைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வார இறுதியில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது நாட்டின் தூதுக்குழு வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் வந்தடையும் என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran has announced that a 10-member delegation from Iran will arrive in Pakistan on Thursday for talks aimed at bringing an end to conflicts with Israel and the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



