பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் அரசு முறைப் பயணமாக ஈரான் நாட்டுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, வளைகுடா நாடுகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடந்த புதன்கிழமை (மே 20) அன்று ஈரானுக்குச் சென்று, அந்நாட்டு அதிபர் மசூத் பெஸேஷ்கியன் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், பாகிஸ்தானிய ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் அரசு முறைப் பயணமாக இன்று (மே 21) ஈரானுக்குச் செல்வதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா முன்மொழிந்த அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வந்தது. இதனால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் மீண்டும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Pakistan's Chief of Army Staff, Asim Munir, is visiting Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










