பாகிஸ்தான் சென்றுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் அமெரிக்கா உடனான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி தலைமையிலான பிரதிநிதிக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) மாலை இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
இந்த நிலையில், இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீருடன் ஈரானிய அதிகாரிகள் முக்கிய உரையாடல்களை மேற்கொண்டதாக, சனிக்கிழமை காலை ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், ஈரானிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி மற்றும் தூதர் ரெசா அமிரி மொக்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். இருப்பினும், இந்த உரையாடல் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் தலைமையிலான குழுவினர் இன்று பாகிஸ்தான் செல்வதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும், தோல்வியடைந்த முதற்கட்ட அமைதிப் பேச்சுக்குத் தலைமைத் தாங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Iranian Foreign Minister Abbas Araghchi met Pakistan Army Chief Asim Munir.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



