அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

எச்-1பி விசாவை 3 ஆண்டுகள் நிறுத்திவைக்க டிரம்ப் அரசு புதிய மசோதா!

எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கும் வகையில் டிரம்ப் அரசு புதிய மசோதா தாக்கல்

News image

டொனால்ட் டிரம்ப் - ANI

Updated On :25 ஏப்ரல் 2026, 11:16 am

அமெரிக்காவில், எச்-1பி விசாவுக்கு மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்கும் வகையில், டிரம்ப் கட்சியான குடியரசுக்கட்சி சார்பில் ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படும் என்ற அளவை 25 ஆயிரமாகக் குறைக்கவும், விதிவிலக்குகளை முற்றிலும் நீக்கவும் வலியுறுத்தி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்தியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விசா தகுதிகள் இருக்கும் வெளிநாட்டினரை, குலுக்கல் முறையில் தேர்வு செய்யாமல், ஆண்டுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் வருமானம் இருப்பவர்களுக்கு மட்டுமே எச்-1பி விசா வழங்குவது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மசோதா வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர், குடும்பத்தினரை அழைத்து வர, க்ரீன் கார்டு பெற தடை விதிக்கவும் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தொழிலாளர்களுக்கு பெரும் பாதமாக இருக்கும் எச்-1பி விசா வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் குழு இந்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. எச்-1பி விசா நிறுத்தச் சட்டம் 2026 என்ற மசோதாவில், விசா முறையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசு, கடுமையாக பணியாற்றும் தன்னுடைய குடிமக்களுக்காக வேலை செய்யவேண்டும், தவிர்த்து மிகப்பெரிய நிறுவனங்களின் லாபத்துக்காக வேலை செய்யக் கூடாது, எச்-1பி விசா காரணமாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும், அமெரிக்க தொழிலாளர்கள் செய்ய தகுதியுடைய வேலைகளைக்கூட அவர்கள் செய்ய விடாமல் தடுப்பது போன்றவற்றிலிருந்து இந்த மசோதா காக்கும் என்று கூறுகிறார்கள்.

மற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எச்-1பி விசா முறை, நமது சொந்த நாட்டு மக்களுக்கு எதிரானது என்றும், முதலில் நம் நாட்டு மக்களுக்கு வேலை கொடுங்கள் என்றும் இதனைக் கொண்டு வந்த பேசிய குடியரசுக் கட்சி உறுப்பினர் கோசர் வலியுறுத்தினார்.

அமெரிக்கர்களையே, சொந்த நாட்டில், வெளிநாட்டினரைப் போல பார்க்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Summary

H-1B visa ban for 3 years? Trump government's new bill!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.