அலி அயத்துல்லா கமேனியின் மறைவுக்குப் பின் புதிய உச்சத்தலைவராக தலைமையேற்க ஈரான் அழைப்பு விடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.
அணுசக்தித் திட்டங்களைக் கைவிடக் கோரி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இஸ்ரேல் ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்க ராணுவத்தினர் கடந்த பிப். 28 ஆம் தேதி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், 40-க்கும் மேற்பட்ட ராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர். கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி காயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் ஈரானின் உயர்நிலை ராணுவ பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானியும், புரட்சிகர காவலர் துணை ராணுவப் படையின் பசிஜ் படைத் தலைவர் ஜெனரல் குலாம்ரெசா சுலைமானியும், ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
கமேனியின் மறைவுக்குப் பின்னர், ஈரானின் புதிய உச்சத்தலைவராக மோஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டு, அவரின் தலைமையின் கீழ் ஈரான் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர். மேலும், கமேனி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவைப் பழித்தீர்ப்போம் என மோஜ்தபாவும் உறுதி எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய கருத்து ஒன்றை தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கமேனியின் மறைவுக்குப் பின்னர் தன்னை இஸ்லாமிய குடியரசான ஈரானை தலைமையேற்க அழைத்ததாகவும், ‘இல்லை வேண்டாம்’ என அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் நேற்று நடைபெற்ற குடியரசுக் கட்சியினரின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசினார்.
நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், “இஸ்லாமியக் குடியரசான ஈரானின் அடுத்த உச்சத் தலைவராகத் தான் வர வேண்டும் என்ற யோசனையை ஈரான் தலைமை முன்வைத்தது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன்” என்றார்.
கமேனியின் மறைவுக்குப் பின்னர், அவரது மகன் மோஜ்தபா கமேனி தலைமையேற்றிருந்தாலும், அவர் காயத்தால் ஒரு காலை இழந்ததாகவும், அவர் கோமாவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இதுவரை அவர் ஒருமுறைகூட பொதுவெளியில் தோன்றவில்லை.
அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் பல உயர்நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலவும் அதிகார வெற்றிடத்திற்கு மத்தியில் டிரம்ப்பின் இத்தகைய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
Summary
US President Donald Trump made the extraordinary claim that Iran's leadership had informally floated the idea of him becoming the Islamic Republic's next Supreme Leader, but he turned them down.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்

போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! - டிரம்ப்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


