அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையெனில் ஈரானுடன் போரிட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஈரானுக்கு எதிரான போரில் எங்களுக்கு உதவாத பிரிட்டனைப் போன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக ஜெட் எரிபொருள்கள் கிடைக்காத நாடுகளுக்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. முதலாவதாக நீங்கள் எங்களிடமிருந்து (அமெரிக்கா) எண்ணெய்யை வாங்கிக்கொள்ளுங்கள். எங்களிடம் ஏராளமான அளவுக்கு இருக்கிறது.

டிரம்ப்பின் பதிவு. - எக்ஸ்.
இல்லையென்றால், இரண்டாவது யோசனையாக கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று ஈரானுடன் போரிட்டு உங்களுக்குத் தேவையான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் எங்களுக்காகப் போரில் உதவி செய்யாதது போலவே நீங்களும் தனியாகப் போரிட கற்றுக்கொள்ள வேண்டும்.
இனி அமெரிக்கா யாருக்கும் உதவாது. ஈரான் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. உங்களுக்கு தேவையான எண்ணெய்யை போய் வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளுக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கிய கடல்வழிப் பாதையான ஈரானுக்கு அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பலவேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதி இல்லாமல் சென்றால் தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, இன்று காலையும் ஈரானின் மிகப்பெரிய அணுசக்தி மையமான இஸ்ஃபஹான் மீது சுமார் 1,000 கிலோ பங்கர் - பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க விமானப் படை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
US President Donald Trump posts on Truth Social, "All of those countries that can’t get jet fuel because of the Strait of Hormuz... I have a suggestion for you: Number 1, buy from the US, we have plenty, and Number 2, build up some delayed courage, go to the Strait, and just take it..."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரை

போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! - டிரம்ப்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


