திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வழிவகுப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி தெஹ்ரானில் ஈரானிய அதிகாரிகளை சந்தித்தது குறித்து...

News image

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:22 pm IST

அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீர் தெஹ்ரானில் ஈரானிய அதிகாரிகளை வியாழக்கிழமை (ஏப்.16) சந்தித்தார்.

கடந்த ஏழு வாரங்களாக நடைபெற்று வரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வழிவகுப்பதற்காக நேற்று ஈரான் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தளபதி தெஹ்ரானில் அதிகாரிகளை இன்று சந்தித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாதில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.

இதனிடையே, ஈரானுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாதில் நடைபெற வாய்ப்புள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

முன்னதாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் லெபனான்-இஸ்ரேல் இடையே செவ்வாய்க்கிழமை (ஏப்.13) நடந்த பேச்சுவாா்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை (ஏப். 15)  அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Summary

To take peace talks to the next stage, Pakistan's Army Chief, General Asim Munir, met with Iranian officials in Tehran on Thursday (April 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.