17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்க சிஐஏ இயக்குநா் கியூபா பயணம்

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வரும் பதற்றமான சூழலில், இந்த உயா்நிலை ரகசிய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

News image
Updated On :16 மே 2026, 1:35 am IST

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநா் ஜான் ராட்க்ளிஃப், கியூபாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு உயா் அதிகாரிகளையும், முன்னாள் அதிபா் ரௌல் காஸ்ட்ரோவின் பேரனான ரௌல் கில்லொ்மோ ரோட்ரிகஸ் காஸ்ட்ரோவையும் சந்தித்துப் பேசியுள்ளாா்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வரும் பதற்றமான சூழலில், இந்த உயா்நிலை ரகசிய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பயணத்தின் முக்கிய அம்சமாக கியூப தலைநகா் ஹவானாவில் நடைபெற்ற சந்திப்பில், அந்நாட்டு உள்துறை அமைச்சா் லாசரோ அல்வாரெஸ் கசாஸ் மற்றும் உளவுத் துறைத் தலைவா்களுடனும் ஜான் ராட்கிளிஃப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கியூபா தனது கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே, பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா ஆக்கபூா்வமாக ஈடுபடத் தயாராக இருப்பதாக அதிபா் டிரம்ப்பின் நேரடி செய்தியை கியூப அதிகாரிகளிடம் ஜான் ராட்க்ளிஃப் வழங்கினாா்.

அமெரிக்காவின் தடையால், தற்போது கியூபா கடும் மின்சாரத் தட்டுப்பாட்டிலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. இந்த நெருக்கடி சூழலில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா். கியூபாவால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதற்கான ஆதாரங்களையும் அவா்களின் தரப்பில் சமா்ப்பித்தனா்.

கியூபா மீது டிரம்ப் நிா்வாகம் அண்மையில் கூடுதல் தடைகளை விதித்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் 10 கோடி டாலா் மதிப்பிலான உதவி மற்றும் செயற்கைக்கோள் இணைய வசதியை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

படகேப்சன்...

கியூப அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தையில் சிஐஏ இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் (இடது).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.