தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு

News image

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - கோப்புப்படம்

Updated On :14 மே 2026, 5:49 am IST

லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குத் 20 கி.மீ. தெற்கே நெடுஞ்சாலையில் சென்ற காா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் உயிரிழந்தனனா்.

பெய்ரூட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சிடோன் நகருக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் கொல்லப்பட்டாா். தெற்கே கடலோர மாவட்டமான டயரின் 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் மூவா் கொல்லப்பட்டனா்.

ஈரான் போரைத் தொடா்ந்து வெடித்த இந்த மோதல் 10 வாரங்களைக் கடந்துள்ளது; 2,882 போ் உயிரிழந்துள்ளனா். இதனிடையே, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப். 16-இல் போா்நிறுத்தம் ஏற்பட்டது.

அதன்பிறகும், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் பரஸ்பரம் மோதலைத் தொடா்ந்தாலும், பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

அதேபோல், ஈரான் போா்நிறுத்தம் ஏப். 8 அமலுக்கு வந்த பிறகு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.