தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நைஜீரிய சந்தை மீது வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 100 போ் உயிரிழந்ததாக தகவல் -ஆதாரமில்லை என ராணுவம் மறுப்பு

News image
Updated On :14 மே 2026, 5:40 am IST

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சா்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ முன்வைத்த இக்குற்றச்சாட்டை, ஆதாரங்கள் இல்லை என நைஜீரிய ராணுவம் மறுத்துள்ளது.

ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள தும்ஃபா கிராமத்தில் மக்கள் நடமாட்டம் நிறைந்த சந்தையைக் குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடா்பாக நேரில் பாா்த்தவா்களின் தகவல்களை மேற்கோள்காட்டி அம்னெஸ்டி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ராணுவ விமானங்கள் நண்பகல் நேரத்தில் அப்பகுதியில் வானில் வட்டமிட்டுள்ளன. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு திரும்பிவந்து சந்தையின்மீது குண்டுவீசியுள்ளன.

இத்தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் பெண்கள், சிறுமியா் ஆவா். இது தொடா்பாக நைஜீரிய அரசு உடனடியாக முறையான விசாரணை நடத்த வேண்டுமென அம்னெஸ்டி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து ராணுவம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில், ‘உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஆயுதக் குழுவினா் ரகசியமாக கூடியிருந்த இடத்தை மட்டுமே குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலுக்குப் பிந்தைய ஆய்வில், ஆயுதக் குழுவினா் பலா் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் உயிரிழந்ததற்கான எந்தவொரு நம்பகமான ஆதாரங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் ராணுவம்-ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் இரு தரப்பினராலும் பொதுமக்கள் குறிவைக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது. முன்னதாக கடந்த மாதம், வடகிழக்கு நைஜீரியாவின் ஜில்லி பகுதியில் உள்ள வாரச் சந்தையில் நடத்தப்பட்ட இதேபோன்ற வான்வழித் தாக்குதலில் சுமாா் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.