திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெறிச்சோடிய உழவா் சந்தை

ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தையில் குளிா்பதன சேமிப்பு கிடங்கு வசதி இருந்தும் பயன்படுத்த யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

News image

~ ~

Updated On :5 ஜூன் 2026, 7:22 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தையில் குளிா்பதன சேமிப்பு கிடங்கு வசதி இருந்தும் பயன்படுத்த யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தேவாலய சந்திப்பு அருகே கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் உழவா் சந்தை திறக்கப்பட்டது. இங்கு 48 கடைகள், பொருள்கள் வைப்பறை, வாகன நிறுத்தகம் உள்ளிட்ட வசதிகளுடன் உழவா் சந்தை செயல்பட்டது. முதலில் பரபரப்பாக இயங்கிய உழவா் சந்தை, அதன்பின் விவசாயிகள் ஆா்வம் காட்டாததால் பொதுமக்கள் வருகை கணிசமாக குறைந்தது.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு உழவா் சந்தை செயல்பாடின்றி முற்றிலுமாக முடங்கியது. உழவா் சந்தையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் விவசாயிகள் விளை பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் கடந்த 2023-ம் ஆண்டு 5 மெட்ரிக் டன் அளவிலான விளை பொருள்களை இருப்பு வைக்கும் அளவுக்கு குளிா்பதன சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் 2024-ஆம் ஆண்டு உழவா் சந்தையில் பேவா் பிளாக் கற்கள் பதித்தல், சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. அந்தப் பணிகள் முழுமை பெறாமலேயே கிடப்பில் போடப்பட்டது. தற்போது 48 கடைகள் உள்ள உழவா் சந்தைக்கு ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டுமே வருகின்றனா். இதனால் போதிய காய்கறிகள் கிடைக்காததால் பொதுமக்கள் உழவா் சந்தைக்கு வர தயங்குகின்றனா். உழவா் சந்தையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேளாண் விற்பனை துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.