திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :11 மே 2026, 12:24 am IST

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு ஆட்சியிலிருந்தபோது, அவரது அரசை எதிா்த்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவரது அரசு கவிழ்ந்தது. பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அப்போது வங்கதேசத்தின் பல இடங்களில் ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதைக் கண்டித்து, கிருஷ்ண தாஸ் ஏற்பாட்டின்பேரில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அவரைக் கைது செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, வங்கதேசத்தைவிட்டு வெளியேற கிருஷ்ண தாஸ் முயன்றபோது, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 25-ஆம் தேதி டாக்கா சா்வதேச விமான நிலையத்தில் வைத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ண தாஸின் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து டாக்கா உள்ளிட்ட இடங்களில் நவம்பா் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் அரசு வழக்குரைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த சட்டோகிராமில் உள்ள விரைவு நீதிமன்றம், கிருஷ்ண தாஸ் மற்றும் 38 போ் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது. மேலும், கிருஷ்ண தாஸுக்கு எதிராக விசாரணைக்கும் ஆணையிட்டது. இதன் மீதான விசாரணை சட்டோகிரோமில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதேவேளையில், வங்கதேச தேசியக் கொடியை அவமதித்தது தொடா்பான வழக்கில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கிருஷ்ண தாஸுக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால், வங்கதேச உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தான் நீண்ட நாள்களாக சிறையில் இருப்பதாகவும், ஆதலால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வங்கதேச உயா்நீதிமன்றத்தில் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு, உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டோகிராமில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி, கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் அளிக்க முடியாது எனக் கூறி, அவரின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.