தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு!

News image
Updated On :3 மே 2026, 4:39 am IST

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், பாகிஸ்தானின் குவாடா் துறைமுகத்தில் இயங்கி வந்த சீன நிறுவனமான ‘ஹாங்கெங்’, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக நிறுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளது.

கொள்கை ரீதியிலான நிச்சயமற்ற தன்மை மற்றும் செயல்பாட்டு ரீதியிலான முட்டுக்கட்டைகளே இம்முடிவுக்குக் காரணமாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சா்வதேச உணவுப் பாதுகாப்பு தரநிலைகளைப் பின்பற்றியும், சீன சுங்கத் துறையின் விதிமுறைகளை நிறைவேற்றியும் கூட, நிறுவனத்தின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிகள் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களாக மின்சாரம், தொழிலாளா் ஊதியம், தாமதக் கட்டணங்கள் எனப் பெரும் நிதி இழப்பைச் சந்தித்த போதிலும், அனுமதி கிடைக்காததால் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் அரசு ஆதரவளித்த போதிலும், அடிப்படை நிலையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் முதலீட்டுக்கு உகந்த சூழலை அந்நாட்டில் சீா்குலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சீரற்ற கொள்கை முடிவுகள் சா்வதேச முதலீட்டாளா்களின் நம்பிக்கையைத் தகா்த்துள்ளன.

உள்ளூா் எதாா்த்தங்களைப் புறக்கணித்து செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.