மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாகிஸ்தான் வீரா்களுக்கு சீனா விண்வெளி திட்ட பயிற்சி!

பாகிஸ்தான் வீரா்கள் இருவருக்கு விண்வெளி திட்ட பயிற்சியை சீனா அளிப்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:17 pm

பாகிஸ்தான் வீரா்கள் இருவருக்கு விண்வெளி திட்ட பயிற்சியை சீனா அளிப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பயிற்சியை அவா்கள் வெற்றிகரமாக முடித்தவுடன், இருவரில் ஒருவா் விண்வெளியில் உள்ள சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளாா்.

இந்திய விண்வெளி வீரரை அமெரிக்கா தனது விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றதுபோல, சீனா தற்போது பாகிஸ்தான் வீரரை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இரு பாகிஸ்தானியா்கள் தோ்வு செய்யப்பட்டு, சீனாவுக்கு கடந்த 24-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனா வந்த பாகிஸ்தான் வீரா்கள் இருவருக்கு பெய்ஜிங்கில் உள்ள விண்வெளி வீரா்கள் பயிற்சி மையத்தில் சீன வீரா்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாகிஸ்தான் வீரா்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நிலையில், அவா்களில் ஒருவா் சீன விண்வெளி திட்டத்தில் ‘பேலோட்’ நிபுணராக விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா். அதன் மூலம், சீன விண்வெளி நிலையத்துக்கு வந்த முதல் வெளிநாட்டு விண்வெளி வீரா் என்ற பெருமையையும் அவா் அடைவாா்’ என்று தெரிவித்தது.

விண்ணில் ஏவப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்: இதனிடையே, பாகிஸ்தான் செயற்கைக்கோள் ஒன்றை சீனா சனிக்கிழமை இரவு விண்ணில் ஏவியது.

‘பிஆா்எஸ்சி-இஓ3’ என்ற அந்த செயற்கைக்கோள் நீண்ட ‘மாா்ச்-6’ சீன ராக்கெட் மூலம் ஷாங்ஸி மாகாணத்தில் உள்ள டையூவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து சீன நேரப்படி சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது, கடந்த ஆண்டு முதல் சீனா ஏவிய 4-ஆவது பாகிஸ்தான் செயற்கைக்கோளாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.