எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலியாக பல்வேறு நாடுகளிலும் நிலக்கரியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் பல நாடுகளின் சரக்கு கப்பல்களும் ஸ்தம்பித்து நின்றன.
உலகளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒருபங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்ததால், ஈரான் போர் ஏற்படுத்திய தாக்கம் சர்வதேச சமூகத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
இந்நிலையில், இறக்குமதியாகும் எரிபொருள் பயன்பாட்டை அதிகம் சார்ந்திருக்கும் ஆசியாவின் பல நாடுகளிலும் ஈரான் போரால் இப்போது எல்என்ஜி உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவின் திரவ வடிவமான எல்என்ஜி, எரிபொருள் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், அதிகரிக்கும் பாதிப்பை கருத்திற்கொண்டு ஆசியாவெங்கிலும் எல்என்ஜி ஏற்றுமதியை தாங்கள் விரிவுபடுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, தட்டுப்பாட்டை ஈடுகட்ட இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் எல்என்ஜி-க்கு மாற்றாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. தென் கொரியாவில் நிலக்கரி பயன்படுத்தி மின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், வியத்நாமில் நிலக்கரி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிலக்கரி தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே நெடுங்கால தீர்வாக அமையுமென்றும் இத்துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் திகழும் இந்தியாவில் கோடைகாலத்தில் மின் தேவையின் அளவீடு உச்சமாக சுமார் 270 கிகாவாட்ஸ் வரை செல்லும்போது நிலக்கரி பயன்பாட்டைத் தவிர்க்காமல் மாற்று வழிகள் இல்லை என்று கூறப்படுகிறது. சுமார் 270 கிகாவாட்ஸ் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் சுமார் 3 மாதங்களுக்குப் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்... - AP
Summary
Asian countries are turning to coal as the Iran war disrupts oil and gas shipments. India, the second-largest coal consumer and producer, is bracing for a scorching summer and will rely more on coal to meet peak demand of 270 gigawatts. It has enough coal for about three months
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுக... அமெரிக்கா உத்தரவு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


