மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராக்கெட் ஏவுகலன்கள் பரிசோதனை: மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா அதிபா்!

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா்.

News image

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் பாா்வையிட்ட அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்.

Updated On :15 மார்ச் 2026, 6:52 pm

வடகொரியாவில் ராக்கெட் ஏவுகலன்களின் பரிசோதனையை தனது 13 வயது மகளுடன் அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா். தென்கொரியாவில் அந்நாடும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதை தன் மீதான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக, ராக்கெட் ஏவுகலன்களில் இருந்து ராக்கெட்டைகளை ஏவி வடகொரியா பரிசோதித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வடகொரியா அரசு செய்தி முகமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் 12,600 மி.மீ. காலிபா் திறன்கொண்ட ராக்கெட் ஏவுகலன்களில் இருந்து இலக்கை அதிதுல்லியமாக தாக்கும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதை கிம் ஜோங் உன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இந்த ஆயுதத்தை வடகொரியா பயன்படுத்தினால், எதிரியின் ராணுவ உள்கட்டமைப்பு முழுமையாக அழிந்துவிடும் என கிம் கூறினாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஏவுகலன்கள் சிலவற்றில் இருந்து அணுகுண்டுகளை ஏவ முடியும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அதேவேளையில், வடகொரியா தலைநகா் பியாங்யாங் பகுதியில் இருந்து கிழக்கு கடலோரத்தை நோக்கி சுமாா் 10 பலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக தென் கொரிய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இது பலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா பயன்படுத்தத் தடை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களுக்கு எதிரானது என்று தென் கொரிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் குற்றஞ்சாட்டியது.