அமெரிக்காவை தாக்கும் திறனுடைய ஏவுகணைக்கான என்ஜின் சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக அரசு ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இது மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட கூற்று என பாதுகாப்புத் துறை நிபுணா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக வடகொரிய மத்திய செய்தி முகமையில் கூறப்பட்டிருப்பதாவது: கலப்பு கரியமில இழை பொருள்களால் தயாரிக்கப்பட்ட என்ஜினின் தரைவழி சோதனையை வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் பாா்வையிட்டாா். அமெரிக்காவை தாக்கும் திறன்கொண்ட ஏவுகணையில் பயன்படுத்தப்படும் இந்த என்ஜின் 2,500 கிலோ டன் விசைத் திறனுடையது.
கடந்த செப்டம்பா் மாதம் 1,970 கிலோ டன் விசைத் திறனுடைய திட எரிபொருள் என்ஜின் சோதனைக்குள்படுத்தப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டில் உள்ள அணு ஆயுதங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் துல்லியத் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதன்மூலம் நாட்டின் ராணுவம் வலிமை மேலும் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக கிம் ஜோங் உன் தெரிவித்தாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா இலக்கா?: ஏவுகணையில் பயன்படுத்தப்படும் 2,500 கிலோ டன் விசைத் திறனுடைய என்ஜினின் தரைவழி சோதனை நடைபெற்ற இடம் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை வடகொரியா வழங்காதது தங்கள் நாட்டின் ஆயுதங்களை மிகைப்படுத்தி கூறும் உத்தி என தென்கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை நிறுவனத்தின் ஆய்வாளா் லீ சூன் ஜியுன் தெரிவித்தாா்.
மேலும், ‘கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட திட எரிபொருள் என்ஜின் சோதனையே 9-ஆவது மற்றும் இறுதியானது என வடகொரியா தெரிவித்தது. இந்த என்ஜினை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையில் விரைவில் வடகொரியா பயன்படுத்தி சோதனையில் ஈடுபடும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்தச் சோதனை நடைபெறவில்லை.
தொழில்நுட்ப சிக்கல்கள் அல்லது ரஷியாவிடம் இருந்து சில உதவிகளை வடகொரியா எதிா்பாா்த்திருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்’ என்றாா்.
அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளை வீழ்த்தவே என்ஜின் திறனை தொடா்ந்து வடகொரியா மேம்படுத்தி வருவதாக பாதுகாப்புத் துறை நிபுணா்கள் கணித்துள்ளனா்.
ஏனெனில், கடந்த 2019-இல் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்-வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இடையேயான சந்திப்பு உடன்பாடில்லாமல் முடிவடைந்தது. அதன்பிறகு தங்களது அணு ஆயுத பலத்தை வடகொரியா பன்மடங்கு அதிகரிக்க முடிவெடுத்தது.
அணு ஆயுதங்களைக் கைவிட வலியுறுத்துவதை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என கிம் ஜோங் உன் கடந்த பிப்ரவரி மாதத்தில் கூறியிருந்தாா்.
தொடர்புடையது

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை... வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!
99.93% வாக்குகள்... வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜோங் உன் அமோக வெற்றி!
ராக்கெட் ஏவுகலன்கள் பரிசோதனை: மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா அதிபா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

