தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தை! வாஷிங்டனில் தொடங்கியது!

அமெரிக்க தலைநகரில் இஸ்ரேல் - லெபனான் இடையில் நேரடி பேச்சுவார்த்தை...

News image

வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை... - AFP

Updated On :2 ஜூன் 2026, 8:17 pm IST

அமெரிக்காவில், இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பும் சண்டையைக் கைவிட முன்வந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (ஜூன் 1) அறிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் இடையே இன்று நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இருதரப்புக்கும் இடையே 4 ஆவது முறையாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை 2 நாள்களுக்குத் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவுக்கான இஸ்ரேலின் தூதர் யெசியேல் லெய்டர் மற்றும் லெபனானின் பிரதிநிதி நாதா ஹமாதே முவாத் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் மூத்த ஆலோசகர் டேனியல் ஹோலர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த திங்களன்று லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 127 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நடைபெறும் இந்த நேரடி பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Summary

direct talks have begun between representatives of Israel and Lebanon in the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.