மலேசியாவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 200 வீடுகள் எரிந்து நாசமாகின.
மலேசியாவின் சபா மாகாணத்தில் உள்ள கடலோரக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 200 வீடுகள் எரிந்து நாசமாகின. நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மாநில செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் ஜிம்மி லாகுங் கூறியதாவது, பலத்த காற்று மற்றும் வீடுகள் மிக நெருக்கமாக இருந்ததே தீ மிக வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது. மேலும், கடல் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தீயை அணைக்கத் தேவையான தண்ணீரைப் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது என்றார்.
இந்தத் தீ விபத்து சபாவின் புகழ்பெற்ற 'நீர் கிராமங்களில்' ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இக்கிராமங்களில் வீடுகள் மரத்தினால் செய்யப்பட்டு, தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கும். இங்கு நாட்டின் மிகவும் ஏழ்மையான சமூகத்தினர், நாடற்றவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் மற்றும் தற்காலிக மறுவாழ்வு வசதிகளை வழங்க கூட்டரசு அரசாங்கம் சபா அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
Summary
Hundreds of people have been displaced after a fire destroyed around 200 homes in a coastal village in Malaysia’s Sabah state on Sunday, state news agency Bernama reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!

செஞ்சிக்கோட்டையில் நள்ளிரவு திடீா் தீ விபத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


