மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!

குஜராத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...

News image

சாயன ஆலையில் தீ விபத்து... - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:50 am

குஜராத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரூச் மாவட்டத்தின் ஜகாடியாவில் உள்ள குஜராத் தொழிற்சாலை மேம்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் வியாழக்கிழமை (ஏப். 23) மதியம் 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீயணைக்கும் நடவடிக்கைகளுக்காக அங்கலேஷ்வர் பகுதியில் இருந்தும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு களமிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

16 workers sustained severe injuries in a massive fire accident at a chemical plant in Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.