ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்குத் தனித்தனியாக அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தங்களது தாயகத்துக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில், ஈரான் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமலில் உள்ள 2 வார போர்நிறுத்த காலம் முடிவடைய இருப்பதால், 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் முனைப்பில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது.
இதனால், பாகிஸ்தான் பிரதமர் ஷரீப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும், ராணுவத் தலைமைத் தளபதி முனீர் ஈரானுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி, நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கால்பாஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசிம் முனீர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இத்துடன், இறுதி நாடாக துருக்கிக்குச் சென்ற பிரதமர் ஷரீஃப் இன்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார். மேலும், தளபதி முனீர் மற்றும் பிரதமர் ஷரீஃப் ஆகியோர் சனிக்கிழமை (ஏப். 18) பாகிஸ்தான் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய அரசு முழுவதுமாகத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Pakistan's PM Shehbaz Sharif and Army Chief Asim Munir, who undertook separate official visits have returned to their homeland.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
ஆஸி.யின் முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்! 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



