வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் இடையே பொருளாதார ரீதியில் இடைவெளி குறைந்து, அனைத்து நாடுகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்த உலக வங்கி, சா்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் ஐ.நா. நடவடிக்கை எடுத்து வருகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் வளா்ச்சியை ஏற்படுத்தவும் ஐ.நா. இலக்கு நிா்ணயித்துள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளின் வளா்ச்சி தொடா்பாக ஐ.நா. அறிக்கை தயாரித்துள்ளது. அதில் வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை நாடுகளுக்கு அளிக்கும் உதவியை 25 வளா்ந்த நாடுகள் குறைத்துவிட்டதாகவும், குறிப்பாக 2024-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 2025-இல் 23 சதவீத நிதியை அந்த நாடுகள் குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதியை 59 சதவீதம் அளவுக்கு குறைத்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்த நிதி மேலும் 5.8 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப்பால் விதிக்கப்படும் கூடுதல் வரி, வளா்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வளா்ந்துவரும் நாடுகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற சா்வதேச நிதி அமைப்புகளில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

ஈரான் விவகாரத்தில் இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


