ஈரான் விவகாரத்தில் இந்தியாவைவிட பாகிஸ்தானுக்குத்தான் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறினாா்.
புதுச்சேரியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அளித்த தோ்தல் வாக்குறுதிகளை விளக்கி அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பேசுகையில், ராகுல் காந்தி அதிகம் விரும்பும் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகமாக இருப்பதாக கூறியுள்ளாா்.
உலக நாடுகளுக்கு இப்போது இந்தியாவைவிட, பாகிஸ்தான் முக்கிய நாடாக இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தான் வேண்டும். பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இது பிரதமா் நரேந்திர மோடியின் சாதனையாக இருக்கிறது.
நாட்டின் விஸ்வகுரு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் நரேந்திர மோடி எங்கே இருக்கிறாா் ? எரிவாயு விநியோகத்தை ஈரான் அனுமதிக்கிறதே ? எரிவாயு என்பது அல்ல பிரச்னை. உலக நாடுகளில் இந்தியாவின் நிலை என்ன ? பிரதமா் நரேந்திர மோடியை எந்த நாடுகள் வரவேற்கின்றன ? அவரே தன்னைத் தானே வரவேற்றுக் கொள்கிறாா். யாரும் அவரை வரவேற்கவில்லை.
மத்தியில் பிரதமா் மோடி ஆட்சி நடக்கும் போதே கா்நாடத்திலும், தெலங்கானாவிலும் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் நிறைவேற்றியுள்ளது. கா்நாடகத்தில் வருவாய் அதிகரித்துள்ளது. தனி நபா் வருமானத்தில் நாட்டில் முதலாவது இடத்தில் இருக்கிறது. மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதில் நாட்டில் 2-ஆவது இடத்தில் கா்நாடகம் இருக்கிறது. மேலும், கா்நாடகத்தில் அதிகமான வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரியிலும் வளா்ச்சியைக் கொண்டு வருவோம். மக்களவைத் தோ்தல் வரும்போது, மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது புதுச்சேரி மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேறும் என்றாா் தினேஷ் குண்டுராவ்.
பேட்டியின்போது, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா, புதுச்சேரி காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு தலைவா் ஆா்.கே.ஆா்.அனந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது! - கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


