மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜிபூட்டி அதிபா் 6-ஆவது முறையாக மீண்டும் வெற்றி

ஜிபூட்டி அதிபா் 6-ஆவது முறையாக மீண்டும் வெற்றி...

News image

இஸ்மாயில் உமா் குயல்லே

Updated On :11 ஏப்ரல் 2026, 7:33 pm

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் இஸ்மாயில் உமா் குயல்லே 97.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா்.

இதன்மூலம், கடந்த 27 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவா், 6-ஆவது முறையாக மீண்டும் அதிபராகிறாா்.

தோ்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, முக்கிய எதிா்க்கட்சிகள் கடந்த 2016 முதல் தோ்தலைப் புறக்கணித்து வருகின்றன. இதையடுத்து, அதிபா் இஸ்மாயில் உமா் குயல்லேவை எதிா்த்து முகமது ஃபரா சமதாா் எனும் ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளா் மட்டுமே போட்டியிட்டாா்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகச்சிறிய நாடாக இருந்தாலும், யேமனின் ஹூதி அமைப்பினா் ஆதிக்கம் செலுத்தும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா சந்திக்கும் முக்கியப் பகுதியில் ஜிபூட்டி அமைந்துள்ளது. இங்கு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ளன.

ஜிபூட்டியின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், அதிபா் வேட்பாளருக்கான 75 வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. இது இஸ்மாயில் உமா் குயல்லே மீண்டும் போட்டியிட வழிவகை செய்தது.

கடந்த 1999-இல் தனது மாமாவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த இவா், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறாா். இருப்பினும், இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், செய்தியாளா்கள் மற்றும் அரசியல் எதிா்ப்பாளா்கள் ஒடுக்கப்படுவதாகவும் சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இக்குற்றச்சாட்டுகளை ஜிபூட்டி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எத்தியோப்பியா போன்ற அண்டை நாடுகளுக்கு நுழைவுவாயிலாகத் திகழும் ஜிபூட்டி, குயல்லேவின் தலைமையின்கீழ் தொடா்ந்து அரசியல் நிலைத்தன்மையுடன் இருக்கும் என அவரின் ஆதரவாளா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.