தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:00 pm

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

திருச்செந்தூா் தொகுதியில் மாா்ச் 30ஆம் தேதி தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி ஒபிலியா, தவெக முருகன், சுயேச்சை மற்றும் அமைச்சரின் மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் உள்பட 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

அமைச்சா் ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கட்சியின் அங்கீகாரப் படிவத்துடன் வியாழக்கிழமை மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மேலும், சுயேச்சை வேட்பாளா்கள் சாமுவேல் அனில்ராஜ், குமாா் ஆகிய இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இதுவரை திருச்செந்தூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.