ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் சனிக்கிழமை (ஏப். 11) மாலை தொடங்கி 32 மணி நேர தற்காலிக போா் நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாா்.
ரஷியாவின் இம்முடிவை ஏற்றுக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அமைதிக்கான இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி உக்ரைனும் போா் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என்றாா்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு நாடுகளும் பரஸ்பர விதிமீறல் குற்றச்சாட்டுகளால் சாடிக்கொண்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளை மக்கள் அச்சுறுத்தலின்றி கொண்டாட வேண்டும் என்றும், இத்தற்காலிக இடைவெளி நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் ஸெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தாா்.
ரஷிய அதிபரின் சிறப்புத் தூதா் கிரில் டிமிட்ரிவ் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளதோடு, அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். இருப்பினும், இப்போா் நிறுத்த அறிவிப்பு அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று ரஷியா தெளிவுபடுத்தியுள்ளது.
ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மரபின்படி, இந்த ஆண்டு ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) கொண்டாடப்படுகிறது.
தொடர்புடையது

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

அமெரிக்கா- ஈரான் இரு வார போா் நிறுத்தம்: இஸ்ரேலும் ஆதரவு

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


