மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சூடானில் மருத்துவமனை மீது துணை ராணுவப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

சூடானில் மருத்துவமனை மீதான துணை ராணுவப் படையின் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறித்து...

News image

சூடானில் துணை ராணுவப் படையின் தாக்குதலில் 10 பேர் பலி... (கோப்புப் படம்) - ஏபி

Updated On :3 ஏப்ரல் 2026, 10:32 am

சூடானில் மருத்துவமனை மீதான துணை ராணுவப் படையின் ட்ரோன் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

சூடானின் ஒயிட் நைல் மாகாணத்தில் உள்ள அல்-ஜபாலைன் மருத்துவமனையின் மீது வியாழக்கிழமை (ஏப். 2) அன்று ஆர்.எஸ்.எஃப். எனும் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அங்குள்ள அறுவைச் சிகிச்சை மையம் மற்றும் மகப்பேறு பிரிவு பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 7 மருத்துவப் பணியாளர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அனைவரும் 80 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, சூடானின் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சமீபகாலமாக சூடானில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஆர்.எஸ்.எஃப். படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் மட்டும் சூடானில் உள்ள மருத்துவ மையங்களைக் குறிவைத்து 200-க்கும் அதிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் போரில் இதுவரை 40,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

10 people were killed in a drone attack on a hospital in Sudan by a paramilitary force.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.