மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமெரிக்க பாடகரை உருவ கேலி செய்த டிரம்ப்! உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு!

அமெரிக்காவில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக பாடகர் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்புக்கு எதிர்ப்பு

News image

ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் | டொனால்ட் டிரம்ப் - சித்திரிப்பு

Updated On :3 ஏப்ரல் 2026, 7:36 am

அமெரிக்காவில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக பாடகர் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் பிரபல பாடகரான ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பாடகராக மட்டுமின்றி, பாடலாசிரியராகவும் இசைக்கலைஞராகவும் புகழ்பெற்றவர். இவர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்திலிருந்தே அவரை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். டிரம்ப்பின் எல்லைக் கோடு கொள்கை உள்ளிட்ட பலவற்றையும் மனிதாபிமானமற்ற மற்றும் வெட்கக்கேடான நடவடிக்கைகள் என்று ப்ரூஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் குறித்து டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் விமர்சித்து பேசியிருப்பதாவது, "ஒரு மோசமான அறுவைச் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட காய்ந்துபோன ஓர் உலர்ந்த பழம்போல் தோற்றமளிக்கும் ஒரு சலிப்பூட்டும் பாடகர் ப்ரூஸ் ஸ்பிரிங்டன். இவருக்கு டிடீஎஸ் (TDS - Trump Derangement Syndrome) எனப்படும் ஒரு பயங்கரமான மற்றும் குணப்படுத்த முடியாத டிரம்ப் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் பெரும் போட்டி நிலவிய தேர்தலில் 86 சதவிகித வாக்குகளுடன் வெற்றிபெற்ற ஓர் அதிபருக்கு எதிராக எப்போதும் வெறுப்பைப் பரப்பக் கூடியவர்.

தூக்கத்தில் இருந்த ஜோ (முன்னாள் அதிபர் ஜோ பைடன்) மற்றும் குடியரசு கட்சியின் தலைமையின்கீழ் நாடு செத்துப்போயிருந்தது. ஆனால், தற்போது உலகில் எந்த நாடும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா சூடாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மக்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை உறிஞ்சும் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின் அதிக விலைகொண்ட இசை நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக பாடகர்கள் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிகழ்ச்சிகள் மோசமானவை என்று டிரம்ப் விமர்சித்ததுடன், அவர்கள் மீது விசாரணைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனிடையே, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மீதான டிரம்ப்பின் தனிநபர் தாக்குதலுக்கு அமெரிக்க இசைக்கலைஞர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திர உரிமையை டிரம்ப் பறிப்பதாக இசைக்கலைஞர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சர்வதேச அளவிலான நிதிக் குறைப்பு, வெளியுறவுக் கொள்கை என பலவற்றிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மட்டுமின்றி, குடிமக்களும் டிரம்ப்புக்கு எதிர்ப்புட் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, உலக நாடுகள் மீதான வரி, ராணுவ நடவடிக்கைகள் என டிரம்ப் மீது உலக நாடுகளும் அதிருப்தி இருந்து வருகின்றன. இவ்வாறு ஒரு நாட்டு அதிபர் மீது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, உள்நாட்டு, அயல்நாட்டிலும் எதிர்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் டிரம்ப் விமர்சனத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Musicians’ Union Defends Bruce Springsteen Amid Trump's bodyshaming post in US

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.