மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மருத்துவமனை மீது தாக்குதல்: சூடானில் 64 பேர் பலி!

சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:31 am

சூடானில் கடந்த வாரம் மருத்துவமனை மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டுப் போரால் பதற்றம் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையான பாராமிலிட்டரி படைக்கும் ஏற்பட்ட அதிகாரப் போர் நாட்டின் சூழலை மோசமாக்கியது.

இரு படைகளும் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறித் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூடானின் தர்ஃபூர் நகரில் கடந்த வாரம் அல் தீன் பயிற்சி மருத்துவமனையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 13 குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டதாகவும் 89 பேர் படுகாயமடைந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராணுவப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ராணுவப் படையினர் இந்தப் புகாரை மறுத்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதல் அருகிலிருந்த காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட நிலையில் தவறி மருத்துவமனை மீது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பொதுவெளியில் அதிகாரிகள் பேச அங்கு அனுமதி இல்லாத காரணத்தால் அதிகாரிகள் தங்களின் அடையாளத்தை மறைத்துப் பேசினர்.

சூடானில் உள்நாட்டுப் போரின் காரணமாக இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், உண்மையான எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகமானது என சூடானில் உள்ள நிவாரணக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மருத்துவமனைகள் மீது மட்டும் நடத்தப்பட்டத் தாக்குதல்களில் இதுவரை 2,000 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.

உலக சுகாதார நிறுவன நிர்வாக இயக்குநர் கெப்ரேயஸ் கூறுகையில், “போதுமான இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. போதுமான துயரங்கள் இழைக்கப்பட்டுள்ளன. சூடானில் மோதலை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

Summary

Strike on a hospital in Sudan killed at least 64 people

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.