பாரீஸ்: 33வது ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கி, பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தென் கொரிய வீரர்களை, வடகொரிய வீரர்கள் என அறிமுகப்படுத்திய ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அதற்காக மன்னிப்புக் கோரினர்.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகிறது.
2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது 33-ஆவது ஒலிம்பிக் போட்டி. இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
பாரீஸில் நடைபெற்ற துவக்கி விழாவின்போது, அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை செய்னி ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் தென்கொரிய வீரர், வீராங்கனைகளை தங்களது தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்தபோது, அவர்களை வடகொரிய வீரர்கள் என்று பொருள்படும் விதத்தில் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சர்வதேச ஒலிம்பிக் குழு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், துவக்க விழாவில் தவறான பெயர் உச்சரிப்புக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, தென்கொரிய நாட்டின் கலாசார விளையாட்டுகள் மற்றும் சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ஜாங் மி ரான் இது குறித்து ஒலிம்பிக் குழுவை சந்தித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்த மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

குஜராத் மக்கள் குறித்து சா்ச்சை கருத்து: காா்கே மன்னிப்புக் கோர பாஜக வலியுறுத்தல்

தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் ஸ்டாலின்! பியூஷ் கோயல்

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


