முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட அஸ்ஸாம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், கூட்டணியை உறுதிப்படுத்துதல், தொகுதிப் பங்கிடுதல் என தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், சில கட்சிகள் இணைந்து கூட்டாகவும் சில கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. ஒரு புறம் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்.06) பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், மற்றொரு புறம் அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும், குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும், எடப்பாடி பழனிசாமியையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “ பொய்யான அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர சமீபத்தில் வேறு எந்த கொள்கையும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை என்பதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். தினமும் அவர் ஏதேனும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பி வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
Summary
Union Minister Piyush Goyal has stated that Chief Minister Stalin is misleading the people of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

தாமரையுடன் இலையும் சேர்ந்து மலரும்: பியூஸ் கோயல்

விஜய் கனவுலகில் இருக்கிறார்; அவருக்கு எந்த புரிதலும் இல்லை: பியூஷ் கோயல் பேட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



