இந்தோனேசியாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.
லெம்பாடா தீவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அந்தத் தீவில் 65 பேரும் பிற பகுதிகளில் 61 பேரும் கனமழைக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி புயல் நகரும் என்பதால் வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், தொலைதூரத்தினால் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து தடைப்பட்டு வருகின்றன.
நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்புப் படையினருடன் மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் புதன்கிழமை வந்துள்ளதாகப் பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜாதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


