ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா ஊரடங்கில் வேலை இழந்தவருக்கு லாட்டரியில் ரூ. 47 கோடி பரிசு!

கரோனா ஊரடங்கில் வேலை இழந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, லாட்டரியில் இந்திய மதிப்பில்  ரூ. 47 கோடி பரிசு கிடைத்துள்ளது.

News image

லாட்டரியில் பரிசு

Updated On :20 மே 2020, 12:14 pm

வெலிங்க்டன்: கரோனா ஊரடங்கில் வேலை இழந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, லாட்டரியில் இந்திய மதிப்பில்  ரூ. 47 கோடி பரிசு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக நியூசிலாந்தின் ‘ஸ்டப்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரைச் சேர்ந்த ஒருவர் இந்த கரோனா ஊரடங்கின் காரணமாக தான் செய்து வந்த வேலையை இழந்து சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது மனைவி அந்நாட்டு சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். வேலையில் இருந்த சமயத்தில், அவர் அந்நாட்டில் இணையதள லாட்டரி நடத்தும் ‘லாட்டோ’ நிறுவனத்தில் இருந்து லாட்டரி எண் ஒன்றைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள குலுக்கல் முடிவில் அந்த நபருக்கு அந்நாட்டு மதிப்பில் 10.3 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 47 கோடி ரூபாய்) பரிசாகக் கிடைத்துள்ளது. இதனால் அவரும் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பரிசுத்தொகை தற்போது வங்கியில் அவர்கள் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை அடையாளம் வெளியிடப்படாத அந்த தம்பதியினர் இந்தப் பரிசின் காரணமாக தங்கள் வாழக்கை நிலையில்  பெரிதாக எதையும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும், எப்போதும் போல இருக்கவும், இயன்ற வரை பிறருக்கு உதவவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.