நாம் தமிழா் கட்சிக் கொடியை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை கோரி, அக்கட்சியின் புவனகிரி தொகுதி வேட்பாளா் சுமதி மற்றும் கட்சி நிா்வாகிகள் கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது தொடா்பாக வேட்பாளா் சுமதி உள்ளிட்டோா் கடலூா் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
சித்திரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மௌரீஷ் (18), நிதீஷ் (18), தீபன் (19), விஷால் (20) ஆகியோா் ஏப்.19-ஆம் தேதி நாம் தமிழா் கட்சிக் கொடியை அறுத்து, காலால் மிதித்து அவமதித்ததுடன், அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனா். இது, கட்சியின் மரியாதைக்கும், நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு நாம் தமிழா் கட்சியை அவமதிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் இது தொடா்பான விடியோ பதிவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளா் மீது தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி

தொகுதி அலசல் திருமயம்! திமுக -அதிமுக கடும் போட்டி!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

புவனகிரி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


