மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலி: 3.912 பேருக்குத் தொற்று

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 11,792 பேர்..

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

UNI

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 11,792 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மெக்சிகன் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 3,912 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,01,238 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பரவலில் மெக்சிகோ தற்போது உச்சகட்ட நிலையில் உள்ளது என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கட்டெல் தெரிவித்தார். 

மெக்சிகோவில் கரோனா வைரஸுக்கு சந்தேகத்திற்கிடமான அனைத்து வழக்குகளுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அமைப்பு பரிந்துரைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.