காஸ்னி: ஆஃப்கன் அரசுக்கு ஆதரவு அளித்த தனது பெற்றோரை சுட்டுக் கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை தனது கையால் சுட்டுக் கொன்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சிறுமி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
கோர் மாகாணத்தின் மத்தியப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் கமர் கல் என்ற சிறுமியின் வீட்டில் இருந்த தனது பெற்றோரை, சாலைக்கு இழுத்துச் சென்று தன் கண் முன்னே தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் இந்த சம்பவத்தை அப்பெண் நிகழ்த்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சிறுமியின் தந்தை அந்த கிராமத்தின் தலைவர், ஆஃப்கான் அரசின் ஆதரவாளரும் கூட.
அவரைத் தேடி வந்த பயங்கரவாதிகள், வீட்டுக்குள் இருந்து சிறுமியின் தந்தையை இழுத்துச் சென்று கொல்ல முயன்றனர். அதனை தடுக்க முயன்ற அவரது மனைவியையும், அவரையும் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் நடந்த போது வீட்டுக்குள் இருந்த சிறுமி கமர் கல், தனது தந்தையின் ஏகே 47 ரக துப்பாக்கியை எடுத்து வந்து, தனது பெற்றோரைக் கொன்ற இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்த பயங்கரவாதிகளும் சிறுமி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கமர் கலுக்கு 14 - 16 வயது இருக்கலாம், ஆஃப்கனில் பொதுவாக பலருக்கும் சரியான வயது தெரிந்திருப்பதில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் அப்பெண்ணின் வீட்டை தாக்கினர். அப்போது, அருகில் இருந்த கிராம மக்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தற்போது கமர் கல்லும், அவரது இளைய சகோதரரும் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிய நிலையில், பல தரப்பில் இருந்தும் கமர் கல்லுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


