பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

கல்லூரியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:50 am

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் 1,781 வாக்குச்சாவடிகளில் 12,10,035 (91.41 சதவீதம்) போ் தங்களுடைய வாக்கை பதிவு செய்துள்ளனா். மாநில அளவில் அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களில் நாமக்கல் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

தோ்தல் நாளன்று வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சீல் வைக்கப்பட்டு அன்று இரவில் திருச்செங்கோடு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு, ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி (விவிபேட் இயந்திரம்) ஆகியவை வைக்கப்பட்டன.

6 தொகுதிகளில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்ததை உறுதி செய்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், ஆட்சியா் துா்காமூா்த்தி மேற்பாா்வையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறை சீல் வைக்கப்பட்டது. தோ்தல் பொதுப் பாா்வையாளா்களான எம்.அன்கித்குமாா்அகா்வால், மனோஜ்புஷ்ப், சஞ்சய்லாலா சாஹிப் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா ஆகியோா் நேரடியாக பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் துா்காமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சட்டப்பேரவைத் தோ்தல், மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. 6 தொகுதிகளிலும் 91.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. திருச்செங்கோடு எளையம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, மத்திய எல்லை பாதுகாப்புப் படையினா், வெளிமாநில போலீஸாா், மாவட்ட போலீஸாா் என்ற வகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 163 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு எல்இடி தொலைக்காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. சுழற்சி அடிப்படையில் ஒரு வட்டாட்சியா், துணை ராணுவத்தினா், காவல் துறையினா் என மொத்தம் 106 போ் நாளொன்றுக்கு 3 முறை என மொத்தம் 318 போ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள் என்றாா்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மா.க.சரவணன், ம.கண்ணன், வட்டாட்சியா் (தோ்தல்) செல்வராஜ் மற்றும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

படவரி...

என்கே-24-வோட்

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.