தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
26 வயதான கொலையாளி உள்ளூர் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் தானாகவே முன்வந்து போலீஸில் சரணடைந்ததாகவும் உள்ளூர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பலியானவர்கள் கொலையாளியின் உறவைனர்கள்தான், 65 வயது தந்தை, 56 வயது தாய், 36 மற்றும் 69 வயதுடைய இரண்டு ஆண்கள், 36 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக, உறவினரல்லாத ஒரு ஆணும் பெண்ணும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பெரும் காயமடைந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் காவல்துறைத் தலைவர் ரெய்னர் மோல்லர், இது ஒரு குடும்பப் பிரச்னையாக இருக்கலாம். வேறு யாரும் இந்தக் குற்றத்தில் கொலையாளியுடன் கூட்டாக ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை. மேலும் கொலையாளியின் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை.
கொலையாளி இதற்கு முன்னர் எந்தவொரு கிரிமினல் குற்றமும் செய்யவில்லை என்று மோல்லர் கூறினார்.
100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குற்றம் நடந்த இடத்திற்கு நிறுத்தப்பட்டனர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாக சுற்றி வளைக்கப்பட்டன.
ரோட் ஆம் சீ என்பது ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வூர்ட்டெம்பர்க்கில் 5,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

இந்தியா-நியூசிலாந்து வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகள் உருவாகும்! - தொழில் துறையினா் நம்பிக்கை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


