மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு: பாகிஸ்தான் அவையில் தீர்மானம்

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை அளிப்பதற்கு வழி செய்யும் தீர்மானம் வெள்ளியன்று பாகிஸ்தான் அவையில் நிறைவேற்றப்பட்டது.

News image

பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு

Updated On :7 பிப்ரவரி 2020, 1:15 pm

இஸ்லாமாபாத்: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை அளிப்பதற்கு வழி செய்யும் தீர்மானம் வெள்ளியன்று பாகிஸ்தான் அவையில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முஹம்மத் கான் இந்தத் தீர்மானத்தை தாக்கல்  செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தவிர்த்து ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'தணடனைகளை அதிகப்படுத்துவதால் குற்றங்கள் குறையாது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராக பொதுவெளியில் தூக்கிவிடும் முறையை நாம் கொண்டு வர இயலாது என்று தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரியும் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துளார். 

இந்த மாறுபாடான கருத்துகளின் இடையே, இந்தத் தீர்மானம் அரசால் கொண்டு வரப்பட்டதில்லை என்றும், தனி நபர் முன்மொழிந்த தீர்மானம் என்றும் , மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி தெளிவுபடுத்தியுள்ளார்.

பாக்சிதானில் குழந்தைகள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் அமைப்பான சஹில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள ஒரு  அறிக்கையின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில்  குழந்தைகளுக்கு எதிரான 1304  பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் ஊடகங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.