/

ஜெர்மனியில் ஒரேநாளில் 966 பேருக்குத் தொற்று

ஜெர்மனியில் ஒரேநாளில் புதிதாக 966 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,17,293 ஆக உயர்ந்துள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Germany's COVID-19 cases rise by 966 to 217,293: RKI
Updated On :27 ஜனவரி 2024, 5:06 pm

UNI

ஜெர்மனியில் ஒரேநாளில் புதிதாக 966 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,17,293 ஆக உயர்ந்துள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேர் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 9,201 ஆக உள்ளது. 

கடந்த மே மாதத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த நிலையில், தற்போது ஜூலை இறுதி முதல் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை எட்டியுள்ளது. 

நோய்த் தொற்று பாதித்து 10,335 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,98,900 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். நோய் பாதித்து சிகிச்சை பலனின்றி 9 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.