விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை

சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image

பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை

Updated On :2 ஏப்ரல் 2020, 10:32 am

பெய்ஜிங்: சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 47,249 பேர் இந்த வைரஸ் பாதிப்பிண் காரணமாக் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் வூஹான் மாகாணத்தில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் சந்தை ஒன்றில் இருந்துதான் கரோனா வைரஸ், மிருகங்களிடம் இருந்து மனிதனுக்குப் பரவியுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து உடனடியாக வன விலங்குகள் விற்பனை மற்றும் உட்கொள்ளுதலுக்குத் தடை விதித்து சீன அரசாங்கம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சீனாவின் சென்ஷேன் மாகாணத்தில் பூனை மற்றும் நாயைச் சாப்பிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்ஷேன் மாகாண அரசு வெளியிட்டுள்ள தகவலில், ‘நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டும்தான் மற்ற விலங்குகளை விட மனிதனிடம் நெருக்கமாகப் பழகுகின்றன. எனவே அதன்மூலம் நோய் பரவலைத் தடுக்க இந்தத் தடை அவசியமாகிறது. அத்துடன் மனிதப் பண்பாடு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக இத்தடை அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது வரும் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.