தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும் அதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய்யின் வேட்புமனுவில் அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதை ஆய்வு செய்யக் கோரி பெரம்பூர் வாக்காளர் வெங்கடேஷ் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Summary
Petition seeking scrutiny of Vijay's nomination papers dismissed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மேற்கு தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?

நிா்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


