மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிராக ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சோம்நாத் பாா்தியின் மனைவி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக தில்லி கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சோம்நாத் பாா்தியின் மனைவி லிபிகா மித்ரா மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், 2024 மே 17-ஆம் தேதி சோம்நாத் பாா்தி மீதான நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுத் தோ்தலில் அவரை பலவீனப்படுத்தும் உள்நோக்கத்துடனும் நிா்மலா சீதாராமன் அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி பாரஸ் தலால் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தொடா்ந்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

250 அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம்: திரிணமூல் காங்கிரஸின் மனு தள்ளுபடி!

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அவதூறு உள்ளடக்கத்தை நீக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


