பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!

தஞ்சையில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நீர்மோர் வழங்கி வரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் குறித்து...

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 5:22 am

தஞ்சை பெருவுடையார் கோயில் திருத்தேரோட்டத்தை காண வந்த பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் விதமாக தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நீர்மோர் பானகம், பழரசம் வழங்கி மத நல்லிணக்கத்தை பறைசாற்றி வருகின்றனர்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவின் 15-ஆம் திருநாளான திங்கள்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தியாகராஜா - பெருவுடையாரே என்ற பக்தி கோஷத்துடன் திருத்தோ் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டு ராஜ வீதிகளில் வலம் வருகின்றது.

கடுமையான வெயில் காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அன்னதானம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டு ராஜ வீதிகளில் வலம் வருவதை தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடும் வெயில் நிலவி வருவதால் பக்தர்களின் தாகத்தை தீர்க்க தஞ்சை தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நீர்மோர் பானகம், பழரசம் ஆகியவை வழங்கி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நீர்மோர் வாங்கி பருகி செல்கின்றனர்.

சாதி, மதம், மொழி கடந்து மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இந்த நிகழ்வு பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Summary

Christians and Muslims in Thanjavur distribute buttermilk to devotees, proclaiming religious harmony!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.