ஜெருசலேம்: பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கு மற்றும் ராக்கெட் வீச்சு சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் வரும் வாரத்தில் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அஷ்டோட் நகரில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டது இஸ்ரேலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தேசிய வானொலியான கான் பெட்டில் வியாழனன்று பேசும்போது அவர் கூறியதாவது:
பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பது என்பது எங்களது கடைசி தேர்வு. இருந்தாலும் அங்கிருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக முழு அளவில் செயல்பட அதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை.
அஷ்டோட் நகர ராக்கெட் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றிற்கு ஹமாஸ்தான் காரணம். காஸாவில் ஹமாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டுவோம் என்று உறுதி தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


