இஸ்லாமாபாத்: இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250 கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நன்கானா சாஹிப் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே நிலையமொன்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவில் குறிப்பிட்ட எந்த ஒரு இடத்தையும் தாக்கி அழிக்க வல்ல 125 -250 கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் எங்களிடம் உள்ளன.
மோடியின் சிந்தனைகள் என்பது காந்தி மற்றும் நேருவின் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.
இந்தியா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தான் இதுபோலச் செய்யாது என்ற எண்ணத்துடன் அணுகுண்டு சோதனைகளை செய்தது முதல் தவறு.
அதேபோல் காஷ்மீர் மக்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இரண்டாவது தவறு.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


