பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை இடையே செப்.6 சந்திப்பு

இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 6:51 am

இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோரிடையே செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதில் இருநாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் இவ்விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2008-ல் இரு நாடுகளுக்கு இடையில் எந்தவொரு ஒப்பந்தங்களும் ஏற்படாத நிலையில், தற்போது 2018-ஆம் ஆண்டில் 18 பில்லியன் அளவிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை மேலும் அதிகரிக்க விரும்புவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தியா, அமெரிக்கா இடையே 2017-ஆம் ஆண்டில் 12 பில்லியன் அளவில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் 126 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.