கான்பெரா: இரட்டைக் குடியுரிமை வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையின் காரணமாக ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜோய்ஸினை, தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஆளுங்கட்சியான தேசிய கட்சியின் சார்பாக துணை பிரதமராக இருப்பவர் பர்னபி ஜோய்ஸ். இவருடன் சேர்த்து ஐந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்ட பொழுது இரட்டைக் குடியுரிமை வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக அவர்கள் மேல் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தேசியக் கட்சியின் பியோனா நாஷ், 'ஒன் நேஷன்' கட்சியின் மால்கம் ராபர்ட்ஸ் மற்றும் செனட் உறுப்பினர்களான 'தி கிரீன்ஸ்' கட்சியின் லாரிஸா வாட்டரஸ் மற்றும் ஸ்காட் லொடியம் ஆகியோர் இதர அரசியல் கட்சித் தலைவர்களாவார்கள். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் இரட்டை குடியுரிமை உள்ள இவர்கள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், எனவே இவர்களது தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அரசியல் சாசன சட்டப் பிரிவு 44-ன் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய குடியுரிமை மட்டுமே பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும்.
வழக்கு நடைபெறும் பொழுதே லாரிஸா வாட்டரஸ் மற்றும் ஸ்காட் லொடியம் ஆகியோர் ராஜிநாமா செய்து விட்டதால் மீதமுள்ள மூவரும் உடனடியாக தற்பொழுது பதவி இழப்புக்கு உள்ளாகினர். தற்பொழுது துணை பிரதமர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. செனட் உறுப்பினர் பதவிகள் கட்சியில் உள்ளவர்களால் தேர்வு செய்யப்படும்.
தீர்ப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பர்னபி ஜோய்ஸ் அதில் தெரிவித்துள்ளதாவது:
எனது இரண்டாவது குடியுரிமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதற்காக வாக்காளர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பினை மதிக்கிறேன். என் கைவசம் உள்ள நியூசிலாந்து கடவுச்சீட்டினை ஒப்படைத்த பின்னர், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பர்னபி ஜோய்ஸ் அவரது தாயார் போலவே நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள டம்ஒர்த்தில் பிறந்தவர். ஆனாலும் அவரது தந்தை நியூஸிலாந்திலே பிறந்தவர். ஆனாலும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்த அவர் 1947-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அதற்கு அடுத்த ஆண்டுதான் அங்கு குடியுரிமைக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. எனவே இதன் காரணமாக ஜோய்ஸின் தந்தையின் குடியுரிமை அவருக்கு பாரம்பரியமாக வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


